பீச் மட்டும் இல்லீங்க... கோவாவில் பார்க்க வேண்டிய வனவிலங்கு சரணாலயங்கள் இதோ!
கோவாவின் கிழக்கில் கர்நாடக எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பகவான் மஹாவீர் வனவிலங்கு சரணாலயம், சிறுத்தைகள், மான்கள் உட்பட பல்வேறு தாவரங்கள், விலங்கினங்களுக்கு தாயகமாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாண்ட்லா வனவிலங்கு சரணாலயம் கோவாவின் மினி வனவிலங்கு சரணாலயமாகும்.
தெற்கு கோவாவில் அமைந்துள்ள கோடிகாவ் வனவிலங்கு சரணாலயம் அதன் அடர்ந்த காடு மற்றும் பல்வேறு வனவிலங்குகளுக்கு பெயர் பெற்றது.
கோவாவின் வடக்கில் கர்நாடகா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மதேய் வனவிலங்கு சரணாலயம், யுனெஸ்கோவின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் பெயர் பெற்ற உலக பாரம்பரிய தளமாகும்.
வடக்கு கோவாவில் மண்டோவி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சலிம் அலி பறவைகள் சரணாலயம் பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக உள்ளது.
பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்களின் தாயகமான நேத்ராவலி வனவிலங்கு சரணாலயம் பசுமையான காடுகள், அழகிய நீரோடைகள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள் என வெகுவாக ஈர்க்கிறது.