அன்னபூரணிக்கு எதிர்ப்பு : ‛யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல...' - வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா
நயன்தாராவின் 75வது படமாக ‛அன்னபூரணி' கடந்தாண்டு இறுதியில் திரைக்கு வந்தது.
இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என இப்படத்தின் இயக்குனர், நயன்தாரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஓடிடியில் இருந்தும் இந்தபடம் நீக்கப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் வாயிலாக நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தி இருப்பதாக உணர்ந்தோம். - நயன்தாரா
மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும், எனது குழுவுக்கும் துளியும் இல்லை.
கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்லும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.