கேன்சர் தலைநகராக மாறும் நம் நாடு!
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் தலைநகரமாக நம் நாடு இருந்தநிலையில், தற்போது கேன்சர் தலைநகரமாகவும் மாறி வருவதாக, அப்போலோ மருத்துவமனையின் அறிக்கை கூறுகிறது.
29 - 40 வயதினரில், மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு, மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்தம் வரும் வாய்ப்புகள் உள்ளன. ஐந்தில் இருவருக்கு கேன்சர் வரும் அபாயமுள்ளது.
இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, புகையிலை பொருட்களை அதிகம் பயன்படுத்துவது.
சிகரெட் பழக்கம் சம்பந்தப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதில்லை. அவர்கள் வெளியிடும் புகை, சுற்றி உள்ளவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது.
புகையிலை பொருட்களால் ஏற்படும் கேன்சர், வாய், தொண்டை, நுரையீரலை பாதிக்கும்.
நம் நாட்டில் பெரும்பாலும் பெண்கள் புகைப்பது இல்லை. பல வீடுகளில் ஆண்கள் வரவேற்பறையில் அமர்ந்து சிகரெட் பிடிப்பதால், வீட்டிலுள்ள பெண்களை பாதிக்கிறது.
சிகரெட் பழக்கத்தை தவிர்ப்பதுடன், புகைப்பவர்களின் அருகில் செல்லாமல் இருக்க என்னென்ன பாதுகாப்பு எடுக்க முடியுமோ, அதை அவசியம் முயற்சிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கம்பு மாவு, சிறிதளவு சீரகம், சோம்பு, உப்பு, சூடான எண்ணெய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.