கவுட் எனும் கால் கட்டை விரல் வலியை அலட்சியப்படுத்தக்கூடாது
ரத்தத்தில் யூரிக் அமிலம் 5 மி.கி., அளவே இருக்க வேண்டும். இதை தாண்டும் போது, மூட்டுவலி ஏற்படும்.
ரத்தத்தில் யூரிக் அளவு அதிகரிப்பதை, மருத்துவ மொழியில் 'கவுட்' என்பர். இரவில் அல்லது அதிகாலையில், கால்கட்டை விரலின் மூட்டு பகுதி வீங்கி, கடுமையான வலியை ஏற்படுத்தும்.
மூட்டு பகுதியை சுற்றி சிவந்து, வளைக்க கூட முடியாத நிலை ஏற்படும். இந்த பாதிப்பை அலட்சியப்படுத்தினால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம்.
மரபியல் ரீதியாகவும் இந்நோய் வரும் என்பதால், குடும்பத்தில் யாருக்கேனும் இப்பாதிப்பு இருந்தால், மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள், இறைச்சி, கடல் உணவு அதிகமாக சாப்பிடுபவர்கள், மது அருந்துபவர்களுக்கு, ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும்.
எனவே, 40 வயதுக்கு மேல், முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆரம்பத்திலே சிகிச்சை பெறும் போது, யூரிக் அமிலத்தின் அளவை, உணவு, வாழ்வியல் முறை, மருந்துகள் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வர முடியுமென்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.