கல்லீரலை பாதிக்கும் பிளாஸ்டிக்... ஆய்வில் தகவல்!
நீர், நிலம், ஆகாயம் மட்டுமின்றி மனித உடல் உறுப்புக்குள்ளும் புகுந்து விட்டது பிளாஸ்டிக் நுண் துகள்கள்.
இந்நிலையில், உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் 'பாலிஎதிலீன்' பிளாஸ்டிக் நுண்துகள், கல்லீரல் கொழுப்பு (பேட்டி லிவர்) பாதிப்புக்கு காரணமாகிறது.
மேலும், இது ஆரோக்கியமற்ற உணவுகளுடன் சேரும் போது பாதிப்பை அதிகரிப்பதாக, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.
உடலில் நச்சுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்யும் பணியில் கல்லீரல் ஈடுபடுகிறது.
மது, துரித உணவு, உடல் உழைப்பின்மை உள்ளிட்டவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது.
எனவே, கல்லீரலை பாதுகாக்க ஆரோக்கியமான உணவு பழக்கம், உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி போன்றவற்றுடன் பிளாஸ்டிக் பாதிப்பு குறித்த விழிப்புணர்வும் அவசியமாகும்.