பிரமாண்டம்... மிரட்டல்... கச்சித கதாபாத்திரம்: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛பொன்னியின் செல்வன்' டிரைலர்
பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்தும் நடக்கவில்லை. தற்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து சாதித்து விட்டார்.
இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்., 30ல் வெளியாகிறது. இப்போது படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
3.23 நிமிடம் ஓடக் கூடிய டிரைலருக்கு கமல்ஹாசன் முன்னுரை வழங்கி குரல் கொடுத்துள்ளார்.
‛‛ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரும் வால் விண்மீன் தோன்றியது...'' என்று தொடங்கும் கமலின் குரல் கணீர் என்று ஒலிக்கிறது.
ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நடக்கும் போட்டி, பகை, வஞ்சம், சூழச்சி என கதையோட்டம் இருக்கும்படியாக டிரைலர் அமைந்துள்ளது.
டிரைலரில் காட்டப்பட்டுள்ள பிரமாண்ட அரண்மனைகள், போர்க்கள காட்சிகள், பிரமாண்ட உணர்வை நமக்குள் கடத்தும் பின்னணி இசை என பக்காவாக டிரைலரில் பொருந்தி உள்ளது.
டிரைலரில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட படத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் தோன்றும்படி உருவாக்கி உள்ளனர்.