பாரம்பரிய ஸ்டைலில் தாவணியில் அசத்தும் பூஜா ஹெக்டே
தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழில் பிஸியான நடிகை பூஜா ஹெக்டே.
தமிழில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர், விரைவில் ஓடிடி தளத்துக்கான தமிழ் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோஷியல் மீடியாவில் அடிக்கடி தன் புகைப்படங்களை இவர் வாடிக்கையாக பதிவிடுவார்.
பேஷன் உடைகள் மட்டுமின்றி, பாரம்பரிய உடைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார் பூஜா ஹெக்டே.
இன்று பாரம்பரிய ஸ்டைலில் தாவணி அணிந்தவாறு எடுத்த புகைப்படங்களை பூஜா பதிவிட்டுள்ளார்.
அதில், பச்சை நிற பட்டுத் தாவணி, பிளவுஸ் மற்றும் பிங்க் நிற லாங்க் ஸ்கர்ட் அணிந்தவாறு, கூந்தலை படிய படிய கொண்டையிட்டு, மினிமல் மேக்கப்பில் அசத்துகிறார்.
கூந்தலில் வைத்துள்ள ரோஜாப்பூக்கள் இவருக்கு ஸ்டைலிஷ் லுக்கை அளிக்கிறது.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.