50 வயதில் மீண்டும் அப்பாவான பிரபுதேவா!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக என்ட்ரி கொடுத்த பிரபுதேவா, ஒரு கட்டத்தில் ஹீரோ ஆகிவிட்டார். .

அதைத் தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வந்தவர், தற்போது மீண்டும் நடிகராக வலம் வருகிறார்.

ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் பிரிந்தார்கள்.

2020ல் மும்பையைச் சேர்ந்த ஹிமோனி சிங் என்ற பிசியோதெரபிஸ்ட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா.

இந்நிலையில் தற்போது பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவரது குடும்பத்தில் முதல் பெண் குழந்தை என்பதால் அவர் பெரிய அளவில் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறாராம்.