மனம் விட்டு பேசினாலே பிரச்னைகள் தீரும்
குடி போதை, போதை வஸ்துக்கள், குடும்ப பிரச்னை, பிடிவாதம் போன்றவை தற்கொலைக்கு காரணங்களாகும்.
வீட்டு சூழல், நோய், மன நிம்மதியில்லாதது, கடன் தொல்லை போன்ற காரணங்களாலும் ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மேலும், கணவரை இழந்த பெண்கள், ஒரு ஆண்டுக்கு பின் தற்கொலை செய்வதை காண முடிகிறது.
மனதில் வலிமை இல்லாததால் தற்கொலை எண்ணம் துாண்டப்படுகிறது.
பொதுவாக, மனதளவிலுள்ள கஷ்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் தற்கொலைக்கு வழிவகுக்கும்.
தனியாக யாரிடமும் பேசாமல் இருப்பவர்களிடம், நண்பர்கள், உறவினர்கள் பேச்சு கொடுக்க வேண்டும். மனம் விட்டு பேசும் நிலைக்கு மாற்றி அவர்களை பாதுகாக்க வேண்டும்.
மனம் விட்டு பேசினால் அவர்களின் தற்கொலை எண்ணம் மாறும் என்பது மனநல டாக்டர்களின் அட்வைஸாகும்.