சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பிரச்னைகளை அறிவோமா

வெயில் அதிகமாக உள்ள சூழலில், சிறுநீரக கற்கள் பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே, சிறுநீரை அடக்குவதை தவிர்க்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுவாக, சிறுநீரக பாதையில் 'அமார்பஸ் பாஸ்பேட்' உப்பு அல்லது 'கால்சியம் ஆக்சலேட்' உப்பு போன்ற தாதுக்கள் சிறிய வடிவில், நெருஞ்சி முள் போன்ற உருண்டையாக உருவாகிறது.

உடலில் உருவாகும் தேவையற்ற, அதிகப்படியான கால்சியம் போன்ற வகை உப்புகள், சிறுநீர் வழியாக வெளியேற வேண்டும்.

சிறுநீரகத்தில் அமிலத்தன்மை, காரத்தன்மை சமநிலையின்மையால் இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்துவிடும்.

பின் அவை படிமங்களாக படிந்து, நாளடைவில் கற்களாக உருவாகின்றன. அவை நகர்வதால் கடுமையான வலி வருகிறது.

கோடைக்காலம், வெயில் அதிகம் உள்ள பருவ சூழல்களில், இப்பிரச்னை அதிகமாகிறது. குறிப்பாக ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

கல் இருப்பது உறுதியானால், உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால், ஆபத்தில்லாமல் கற்களை வெளியேற்றிவிடலாம்.