சம்மருக்கு இதமாக நீச்சல் உடையில் அசத்தும் ராய் லட்சுமி

'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி, மங்காத்தா, காஞ்சனா மற்றும் அரண்மணை உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார். உயரமும், அதற்கேற்ற ஸ்லிம் மற்றும் கிளாமர் லுக்கில் ரசிகர்களை அசர வைப்பார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள ராய் லட்சுமி விதவிதமான உடைகளில் புகைப்படங்களை பதிவிடுவார்.

தற்போது கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வகையில், குளிர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஸ்டைலிஷான உடைகளுடன் உள்ள புகைப்படத்தை அவ்வப்போது பதிவிடுகிறார்.

ராய் லட்சுமி அணிந்துள்ள இந்த கட் அவுட் நீச்சல் உடையில், பிரின்டட் பழங்கள், இலைகள், பூக்கள் மற்றும் பட்டாம்பூச்சி போன்றவை உள்ளன. மினிமல் கிளாமருடன் அசர வைக்கிறார்.

பல விதமான நீல நிறத்தில் ஃபுல் ஸ்லீவில் ஆழமான நெக்லைன் மற்றும் பக்கவாட்டில் கட் அவுட்களுடன் உள்ளது. ஸ்டைலிஷாக சன் கிளாஸ் அணிந்துள்ளார்.

இந்த ப்ளூ நிற நீச்சலுடையுடன் டிஸ்டிரஸ்டு ஜீன்ஸ் மினி டிரவுசரை அணிந்துள்ளார். இது ராய் லட்சுமிக்கு ஸ்டைலிஷான மாடர்ன் லுக்கை அளிக்கிறது.

அசரடிக்கும் சிவப்பு நிற நீச்சல் உடையில், நீண்ட நெக்லைன், பக்கவாட்டில் கட் அவுட்கள் உள்ளன. இடுப்பருகே தாவணியை போன்று சுற்றியிருப்பது, டாப்ஸ் மற்றும் மினி ஸ்கர்ட் போன்ற பேஷனை நினைவூட்டுகிறது.