80வது பிறந்த நாளில் வாழ்த்திய ரஜினிக்கு பதில் கொடுத்த அமிதாப்பச்சன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன் நேற்று முன்தினம் தனது 80வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அதையடுத்து இந்திய சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனுக்கு 80வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார்.

லெஜன்ட் அமிதாப்பச்சன், எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியவர், இந்திய திரை உலகின் உண்மையான சூப்பர் ஹீரோ 80 வயதில் நுழைகிறார் - ரஜினிகாந்த்.

‛ரஜினி சார், நீங்கள் எனக்கு டூமச் கிரெடிட் கொடுத்துள்ளீர்கள். உங்களது உயரத்தோடும் பெருமையோடும் என்னை ஒருபோதும் ஒப்பிட முடியாது. - அமிதாப்பச்சன் பதிலுக்கு பதிவு.

நீங்கள் ஒரு சக நடிகர் மட்டுமின்றி அன்பான நண்பர். உங்களுக்கு எனது அன்பும் நன்றியும்' - அமிதாப்பச்சன்.