காதல் டூ கல்யாணம் : ரகுல் - ஜாக்கிக்கு டும் டும் டும்...

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தன் நீண்ட நாள் காதலரான நடிகர் ஜாக்கி பக்னானியை மணந்தார்.

திருமணத்திற்கு ப்ளஷ் பிங்க் நிறத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பாரம்பரிய வேலைப்பாடுகளுடன் கூடிய லெஹங்காவை ரகுல் அணிந்திருந்தார்.

அதற்கு பொருத்தமான மிகவும் லைட்டான மேக் அப் போடிருந்தார். இளஞ்சிவப்பு நிறத்தில் அவரது லிப் ஸ்டிக் முதல் அணைத்து மேக் அப்பும் மைல்டாக இருந்தது.

அவரது லெஹங்காவை பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலியானி வடிவமைத்தார்.

இவர்களது திருமணம் நேற்று, பிப்ரவரி 21ம் தேதி தெற்கு கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் நடந்தது.

ரகுல் ஹிந்தி தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரம் சம்மதம் தெரிவித்தனர். மேலும் சீக்கிய முறைப்படி திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் அனன்யா பாண்டே, ஷில்பா ஷெட்டி, அர்ஜூன் கபூர், வருண் தவான், ஷாகித் கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்றனர்.

ரகுல் - ஜாக்கி ஆகியோர் தங்களது திருமணத்தை 'பசுமை திருமணம்' என்ற பெயரில் நடத்தினர்.