மலச்சிக்கல் பிரச்னைக்கு தவிர்க்க வேண்டியவை என்னென்ன?

பெருங்குடல், மலக்குடல் பிரச்னைகள் நம் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய மிகப் பெரிய சவாலாக உள்ளது.

மலக்குடலில் எற்படும் பைல்ஸ் (மூல நோய்) பாதிப்பால் நாள்பட்ட புண், எரிச்சல், ரத்தக் கசிவு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகளை உண்டாக்கும்.

மலச்சிக்கலை தவிர்க்க ஒரே இடத்தில் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேல் உட்காரக் கூடாது. ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடக் கூடாது.

சிரமப்பட்டு மலம் கழிப்பது கூடாது. மொபைல் போன் பார்த்தபடி அதிக நேரம் கழிவறையில் அமர்ந்திருந்தால், புவியீர்ப்பு விசை காரணமாக மலச்சிக்கலை அதிகப்படுத்தி, பைல்ஸ் வரலாம்.

தசைகளை வலுப்படுத்த ஜிம் பயிற்சியோடு, புரத சப்ளிமென்ட் அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

இல்லை என்றால் பைல்ஸ் உண்டாவது மட்டுமல்ல, மொத்த உடல் செயல்பாட்டிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைக் மிதமாக்கும். இதை தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம்.