குடியரசு தினம்: டில்லியில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி
இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
டில்லி கர்த்வயா பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றினார்.
இந்நிகழ்வின்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்றார்.
112 பெண்கள் கொண்ட இசைக்குழுவினர், பெண்கள் சக்தியை பறைசாற்றும்படி இசைக்கருவிகளை வாசித்தபடி அணிவகுத்து வந்தனர்.
தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பும் நடந்தது.
மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளின் ஊர்வலம் அனைவரையும் கவர்ந்தது.
முன்னதாக தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.