தங்கத்தால் இழைக்கப்பட்ட ரோபோ சங்கர் மகளின் திருமண புடவை !
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு, தாய் மாமா கார்த்திக் உடன் சமீபத்தில் திருமணம் நடந்தது.
அவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக உள்ளன.
அதேநேரத்தில் இந்திரஜா அணிந்திருந்த திருமணப் புடவை குறித்தும் டிரெண்டாகி வருகிறது.
அதில், திருமணப் புடவை தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திரஜா கூறியுள்ளார்.
புடவை முழுக்க இரண்டு கிராம் தங்கத்தை பயன்படுத்தி நெய்யப்பட்டதாக இந்திரஜா பேட்டியில் கூறியுள்ளார்.
அதேப்போல், பிளவுஸிலும் ஆரி வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திரஜா மற்றும் மணமகன் கார்த்திக் இருவருடைய இன்ஷியலும் (கே.ஐ) பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்திரஜாவின் மாங்கல்ய டிசைனும் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.