சாய் பல்லவி தங்கைக்கு நிச்சயதார்த்தம்... இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி.

இவர் பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார்.

இவர் தமிழில் சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அண்மையில் இவர் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

தனது காதலன் இவர் தான் என வினீத் என்ற நபரையும் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில், இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இவரது நிச்சயதார்த்த போட்டோஸ், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.