புடவை பிளஸ் ஓவர்கோட் காம்பினேஷனில் அசத்தும் ஷில்பா ஷெட்டி!
இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், இன்னமும் அழகிய பேஷன் உடைகளில் உற்சாகமாக உலா வருகிறார் ஷில்பா ஷெட்டி.
பாரம்பரியம் மாறாமல் புடவைகளிலும் அவ்வப்போது நவீனத்தை புகுத்தி, ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்சியளிப்பார் அவர்.
குறிப்பாக டிரெண்டிங்க்கு தகுந்தாற்போல் புடவையுடன் ஒவர்கோட் அணிந்தவாறு அவ்வப்போது ஸ்டைலிஷாக உற்சாக நடை போடுவார்.
இதை பார்க்கும்போது, புடவையைக் கூட இவ்வளவு மாடர்னாக அணிய முடியுமா, என ஆச்சர்யம் கலந்த ஏக்கப்பார்வை பலருக்கும் எழுவதில் வியப்பில்லை.
சமீபத்தில் நடந்த விழாவில் பழுப்பு நிற புடவையில், இன்றைய டிரெண்டுக்கேற்ப அழகிய கருப்பு நிற ஓவர்கோட்டும் அணிந்து மிடுக்காக நடைபோட்டார்.
அதேப்போல், லைட் கிரே நிற பாடிகான் கவுனில், அதேநிறத்தில் லாங் ஓவர்கோட்டுடன் ஸ்டைலிஷாக...
சிவப்பு நிற புடவையில், மேட்சிங்காக கோல்டன் நிறத்தில் அழகிய மெல்லிய எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய சிவப்பு நிற வெல்வெட் ஓவர்கோட்டில்....
ஐவேரி நிற ஜம்ப் ஷூட் உடையில் ஷார்ட் கோட் அணிந்தவாறு ஸ்டைலிஷ் லுக்குடன்...
டார்க் பச்சை மட்டும் கருப்பு நிற ஓவர் கோட் மற்றும் புடவை, ஹேண்ட் கிளவுஸ் என அசத்தும் சில்பா ஷெட்டி.