குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வுக்கான உணவு முறை சில!

எந்த உணவை, எப்போது, எப்படி, எவ்வளவு, எங்கே சாப்பிடுவது என்பதில்தான் அடங்கியுள்ளது ஆரோக்கியத்தின் ரகசியம்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கல்லீரல் பிரச்னை, இதய நோய்கள் என அனைத்து நோய்களின் அடிப்படையும் உணவில் தான் துவங்குகிறது.

தற்போது அதிக அளவில் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் பருமன் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர்.

தவறான உணவு பழக்கம், காய்கறி மற்றும் பழங்கள் உணவில் சேர்க்காமை, நேரம் தவறி உண்பது, அதிக ஜங்க்புட் போன்றவற்றால் புற்றுநோய் அபாயமும் அதிகரித்துள்ளது

குழந்தைகள் பிறந்த ஆறு மாதங்கள் தாய்ப்பால்; அதன் பின்னர் தாய்ப்பாலுடன் இணை உணவுடன் துவங்க வேண்டும்.

இணை உணவு துவங்கும் போது, சர்க்கரை, உப்பு கட்டாயம் தவிர்த்து இயற்கையான அனைத்து உணவையும் அறிமுகப்படுத்தி விட வேண்டும்.

சுவையாக இருந்தால்தான் குழந்தை உண்ணும் என நினைத்து சர்க்கரை கலப்பது, உப்பு சேர்ப்பது கூடாது. பிடிக்கவில்லை என்றாலும் காய்கறி, பழங்கள் சாப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும்.

குழந்தைகள் பிஸ்கட், பீட்சா, பர்கர், குளிர்பானங்கள் , சாக்லேட் போன்றவை அடிக்கடி சாப்பிட்டால் 30-40 வயதில் வரவேண்டிய நோய்கள் 15-20 வயதுக்குள் வந்து விடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

முடிந்த வரை வீட்டில் எண்ணெய், சர்க்கரை, உப்பு அளவு குறைத்து சமைத்து, அவர்களை சாப்பிட வைப்பதே சிறந்தது.