வெள்ளைப் பூசணியின் சில ஆரோக்கிய நன்மைகள் !
வைட்டமின் பி, சி, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் வெள்ளைப் பூசணியில் நிறைந்துள்ளன.
அல்சர் பிரச்னையால் அவதிப்படுவோருக்கு, வெள்ளைப் பூசணி சாறு நிவாரணம் தரும்.
காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும், 'அசிடிட்டி' பிரச்னையை எதிர்த்து போராடவும் இதன் ஜூஸ் உதவும்.
தினமும் காலையில் சிறிது தேனுடன் வெள்ளைப் பூசணி ஜூஸ் கலந்து குடித்து வர, வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தினமும் காலையில் பூசணி ஜூஸ் குடித்து வர, எடை குறைவதுடன், உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்; உடல் சூடு தணியும். உடலும் நீரேற்றமுடன் இருக்கும்.
வெள்ளைப் பூசணி ஜூஸில் தேன் கலந்து, தினமும் காலை - மாலை என, இருவேளை குடித்து வர, ரத்தம் சுத்தமாகும்.
சிறுநீருடன் ரத்தம் வெளிவருவது, 'அல்சரால்' உடலினுள் ரத்தக் கசிவு ஏற்படுவது, 'பைல்ஸ்' போன்றவற்றால் ஏற்படும் ரத்தக்கசிவுக்கு பூசணி ஜூஸ் பலன் தரக்கூடும்.