மாடர்ன் லுக் தரும் ஸ்டைலிஷ் பிளவுஸ்கள்

பாரம்பரியமான புடவைகளில் நாகரிகத்தை புகுத்தி ஸ்டைலாக வலம் வருவதே தற்போதைய பேஷன்.

'அய்யய்யோ... புடவையை கட்டினால் பட்டிக்காடு என்று கேலி செய்வர்' என தடா கூறி எஸ்கேப் ஆனவர்களையும், இந்த ஸ்டைலிஷ்ஷான பிளவுஸ்கள் மெதுவாக தன் பக்கம் ஈர்த்து வருகின்றன.

சாதாரணமாக கட்டும் புடவையுடன், முழுக்கை, கட்- அவுட் பேட்டர்ன், நீண்ட மற்றும் புளோரல் பஃப் வைத்த பிளவுஸ்கள் அணியும் போது மாடர்ன் தோற்றத்துடன் கூடுதல் அழகும் கிடைக்கிறது.

நீண்ட பஃப் உடன் கூடிய முழுக்கை, குளோஸ்டு நெக், புளோரல் பஃப் உடன் கூடிய முழுக்கை, பூக்களின் இதழ்களை போன்று அடுக்கடுக்கான பஃப்கள், பிரில் டைப் பஃப் போன்ற பிளவுஸ்கள் தற்போது டிரெண்டிங்.

இவை பிரபலங்கள் மற்றும் இளசுகளின் சாய்ஸாக மாறி வருகிறது.

சமீபத்தில் பச்சை நிற சிஃபான் புடவை அணிந்தபடி நடிகை தமன்னா பதிவிட்ட புகைப்படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்லீவ்லெஸ் உடன் கூடிய கட் - அவுட் பேட்டர்ன், சிறிய அலங்கார கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய பிளவுஸ் மற்றும் மரகதக்கற்கள் பதிக்கப்பட்ட காதணிகள் தமன்னாவுக்கு கூடுதல் அழகை தருகிறது.