கோடைக்கால தொற்றை தவிர்க்க டிப்ஸ்!
ஐஸ்க்ரீம் மற்றும் குச்சி ஐஸ் ஆகியவற்றை தவிருங்கள். இது, மஞ்சள் காமாலைக்கும், காலராவுக்கும் கதவைத் திறந்து விடும்.
கோடைக்கால நோய்கள் பலவும் நீரின் வழி பரவும். அதனால், கொதிக்க வைத்து ஆறவிட்டுக் குடியுங்கள்.
தர்ப்பூசணி, பப்பாளி, கிர்ணி, வாழைப்பழம் எல்லாம் உங்கள் உடல் சூட்டைக் குறைக்கும். எலுமிச்சம் பழ ஜூஸ் மிகவும் நல்லது.
காய்கறிகளை நன்றாக வேகவைத்து உண்ணவும். கோடைக் காலத்தில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும். அதனால், சமைத்த உடனே சாப்பிடுவது சிறந்தது
தெரு ஓர கடையில் விற்கப்படும் உணவு நாக்கில் நீர் ஊறவைக்கும் தான். அதிலும் சாட், ஜூஸ் வகைகள் சப்புக் கொட்ட வைக்கும். 'பாஸ்ட் புட்' விற்கிற இடம் பக்கமே திரும்பாதீர்கள்
'சன் ஸ்ட்ரோக்' என்பது பலரையும் பாதிக்கும் பிரச்னை. குடை, தொப்பி போன்றவை இல்லாமல் வெயிலில் செல்லவே கூடாது
அதிக சூடு பாதிப்பு ஏற்பட்டால் பயங்கரமாக வியர்த்துக் கொட்டும். பலவீனமாக இருக்கும். சருமம் நிறமிழக்கும். நாடித்துடிப்பு கூட பலமிழந்து போகலாம். வாந்தி- மயக்கம் வரும்.
இந்த பாதிப்புகள் தென்பட்டதும், குளிர்ச்சியான இடத்தில் சற்று ஓய்வெடுக்கலாம். நிறையத் தண்ணீர் குடிக்கலாம்
சூட்டினால் வயிற்று வலி வந்தால், சிறிதளவு புளியை கரைத்து, அதனுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து குடித்தால், சூட்டு வலி உடனே சரியாகும்.