கோடை விடுமுறை... குட்டீஸ்களுக்கு தின்பண்டங்களுக்கு நோ சொல்லுங்க !
கோடை விடுமுறை என்றாலே நம்மில் பலர் உணவில் கவனம் செலுத்துவதில்லை.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், குழந்தைகளுக்கு 'ஜங்'புட் அயிட்டங்களை அதிகளவில் கொடுக்க வேண்டாம்.
தின்பண்டங்களை நாம் அவர்கள் கண்ணில்படும்படி வைத்திருந்தால், வீட்டில் அதிக நேரம் இருப்பதால், நிச்சயம் அவற்றை எடுத்து முழுமையாகச் சாப்பிட விரும்புவர்.
விடுமுறைக்கு பின் அவர்கள் எடை அதிகமாகியிருப்பது காண முடியும்.
எனவே, தேவையற்ற தின்பண்டங்களை வாங்காமல், பழங்கள், சத்து நிறைந்த காய்கறிகளை அவர்களுக்கு உண்ண கொடுக்க வேண்டும்.
'டிவி', மொபைல்போன், லேப்டாப் பயன்பாடு 1 - 2 மணி நேரத்துக்குள் தான் இருக்க வேண்டும். நீண்ட நேரம் அவற்றிலே முழ்கியிருப்பதை தடுக்க வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.
வெயிலில் குறைந்த நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பர் என்பது குழந்தைகள் நல டாக்டர்களின் அட்வைஸாகும்.