ஒளியிலே தெரிவது தேவதையா!
பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி. இவர் சினிமாவில் பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்தார்.
பிரபுதேவா, ரோஜா நடித்த 'ராசய்யா' திரைப்படத்தில் தனது தந்தை இளையராஜாவின் இசையில் 'மஸ்தானா மஸ்தானா...' என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து 2001ல் பாரதி திரைப்படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு...' என்ற பாடலை பாடிய பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது.
வேறு எந்தவொரு பாடகி குரலின் சாயலும் இல்லாமல், தனித்துவம் மிக்க குரல் இனிமையில் பல வெற்றி பாடல்களை பாடியிருக்கிறார் பவதாரிணி.
கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன் தினம் மறைந்தார்.
பவதாரிணியின் உடன் பிறந்த சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் தந்தை இளையராஜா போன்று சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றனர்.
இவர் பாடிய பாடல்களில் பிரபலமான பாடல்கள் சில.... ஒளியிலே தெரிவது தேவதையா... - அழகி, ஆத்தாடி ஆத்தாடி... - அனேகன்
மயில் போல பொண்ணு ஒன்னு... பாரதி, இது சங்கீத திருநாளா... - காதலுக்கு மரியாதை, தென்றல் வரும்... - ப்ரண்ட்ஸ்
காற்றில் வரும் கீதமே... - ஒரு நாள் ஒரு கனவு, தாலியே தேவயில்ல... - தாமிரபரணி
நீ இல்லை என்றால் வானவில்லே... - தீனா, வானம் அதிரவே... - ரமணா, தவிக்கிறேன்... தவிக்கிறேன்... - டைம்