குழந்தைகளுக்கு வரும் காது கேளாமை பிரச்னை? எவ்வாறு சரி செய்யலாம்?

பொதுவாக குழந்தைகளுக்கு பேச்சு வராமல் இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

முதலில் மூளை நரம்பில் பாதிப்பு இருந்தால் பேச்சு வராது. மன நலக் குறைபாடு இருந்தாலும், காது கேளாமை இருந்தாலும் பேச்சு வராது.

குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்பதற்காக 4 ஆண்டுகளுக்கு மேல் கால தாமதம் செய்து அதன் பின் சிகிச்சைக்கு சிலர் செய்வதுண்டு.

இது தவறான செயலாகும். சிரமப்பட்டு தான் பேச்சை கொண்டு வர முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

காது கேளாமையால் பேசாமல் இருந்தால் நுாறு சதவீதம் பேச்சு வர வைக்க முடியும். 'காக்லியர் இம்பிளான்ட்' அறுவை சிகிச்சையாலும் பேச வைக்க முடியும்

பிறந்த குழந்தைகளுக்கு ஓ.ஏ.இ., அறுவை சிகிச்சை செய்வதாலும், மற்ற குழந்தைகளுக்கு பி.இ.ஆர்.ஏ., என்ற அறுவை சிகிச்சை மூலமும் பேச வைக்க முடியும்.

மேலும் 1 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே காக்லியர் அறுவை சிகிச்சை செய்ய முடியும். அதன் பிறகு இந்த அறுவை சிகிச்சையால் பயனில்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.