உள் உறுப்புகளை பலமாக்கும் தூயமல்லி அரிசி

தூய மல்லி அரிசியை தொடர்ந்து உணவாக எடுத்துக் கொள்ளும் போது, நரம்பு மண்டலம் பலம் பெறும்.

உடல் உள் உறுப்புகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும், தூயமல்லி அரிசி வழங்குகிறது.

பித்தம் காரணமாக சிலருக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும். தூயமல்லி அரிசியில் உணவு செய்து சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்னைகள் கட்டுக்குள் வரலாம்.

சருமத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் சில உணவுப் பழக்க வழக்கங்களால் இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படும். இதைத் தடுக்க தூய மல்லி அரிசி உணவைச் சாப்பிட்டு வந்தால் சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்கலாம்.

தூய மல்லி அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உணவாகச் சாப்பிடலாம்.