மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் டி கிடைக்க வெயிலோடு விளையாடலாம்...

மழை காலங்களில் குழந்தைகள் உடலில், வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். இதனால் உடல் தானாகவே போதுமான அளவு வெப்பத்தை கிரகித்துக் கொள்ளும்.

சூரிய ஒளியில் உள்ள, 'அல்ட்ரா வயலெட் பி' கதிர்கள் வாயிலாக, நம் உடலுக்கு, வைட்டமின் 'டி' கிடைக்கிறது. இது, காலை, 7:00 - 10:00 மணி மற்றும் மாலை, 4:00 - 6:00 மணி வரையும் இருக்கும்

பிறந்த ஆறாவது மாதத்திலிருந்து கைக் குழந்தைகளை, தினமும் காலை, 7:00 மணி வெயிலில், 10 நிமிடங்கள் வெற்று உடம்பில் சூரியக் குளியல் எடுக்க வைக்கலாம்

காலை, 7:00 - 10:00 மணி வரை, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், தினமும், 10 நிமிடங்கள் வெற்றுடலில் சூரியக் குளியல் எடுப்பதால், அவர்களுக்கு போதிய வைட்டமின் 'டி' கிடைக்கும்.

வார இறுதி விடுமுறை நாட்களில், பூங்கா, கடற்கரை, மைதானம் உள்ளிட்ட இடங்களுக்கு, மாலை வேளைகளில் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். காலை அல்லது மாலை வெயிலில், குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்

'சென்சிட்டிவ்' சருமம் உடைய குழந்தைகளுக்கு, 'சன் அலர்ஜி' ஏற்படலாம். இவர்கள், 'சன் பாத்' எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்

குறிப்பாக படர் தாமரை, சொரியாசிஸ் போன்ற பூஞ்சை நோய்களுக்கு ஆளானோர், மருத்துவரின் பரிந்துரையுடன், 'சன் பாத்' எடுக்கலாம்.