அடிக்கடி ஏற்படும் வயிற்றுப் பிரச்னையை தவிர்க்க!
ஒரு சிலர் சாப்பிட்டவுடனேயே மலம் கழிப்பர். அதிர்ச்சியான தகவலை கேட்டவுடன் வயிறு கலங்குவது, பட்டாம்பூச்சி பரப்பது போன்ற பதட்டமான உணர்வை அனுபவிப்பர். செல்போன் ரிங்டோனுக்கு கூட பதட்டமடைவர்.
இது மூளைக்கும் வயிற்றுக்கும் இடையேயான தொடர்பால் ( கட் பிரெய்ன் கனெக்ஷன்) ஏற்படக்கூடியது. இதில், வேகஸ் நரம்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
மருந்து, மாத்திரைகளால் சரிவர நிவாரணம் கிடைக்காத நிலையில், பதட்டம், பயம், மன அதிர்ச்சி போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இதை தவிர்க்கலாம்.
மேலும், வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை முறையாக பராமரிக்க வேண்டும். இதற்கு புரோபயாட்டிக்ஸ் அதிகமுள்ள தயிர் போன்றவற்றை அதிகளவில் சேர்க்க வேண்டும்.
மேலும், படபடப்பு, மன அதிர்ச்சி போன்றவற்றை கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும்.
எதையும் நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். நம்மை சுற்றி பாசிட்டிவ் ஆக நினைக்கக்கூடிய நண்பர்கள், உறவினர்களுடன் நேரம் கழிக்க வேண்டும்.