விதவிதமான பிளவுஸ்களுடன் புடவையில் அசத்தும் த்ரிஷா
சவுத் குவின் என அழைக்கப்படும் த்ரிஷா விதவிதமான பேஷன் பிளவுஸ்களுடன் புடவைகளை உடுத்தி ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறார். அவற்றில் சில...
ஹை நெக் பிளவுஸ்... இந்த டிசைனில் நேர்த்தியுடன் உள்ளார் த்ரிஷா. மாடர்ன் லுக்கையும் தருகிறது.
எம்பிராய்டரி பிளவுஸ்... அழகிய பூக்களின் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பிளவுஸ் த்ரிஷாவின் அழகை மேலும் மெருகேற்றுகிறது.
பாரம்பரியத்துடன் கூடிய மாடர்ன் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் கட் அவுட் பிளவுஸில் எழிலான புன்னகையுடன்...
காலர் பிளவுஸ்... த்ரிஷா அடிக்கடி தனது கலெக்ஷனில் காலர் பிளவுஸ்களை தேர்ந்தெடுக்கிறார். இது மாடர்ன் மற்றும் ரிச் லுக்கை அளிக்கிறது.
மெல்லிய மற்றும் லேஸ் பிளவுஸ்... பிளெய்ன் புடவைக்கு மேட்சிங் ஆக மெல்லிய, லேஸ் பிளவுஸ்களை உடுத்தும்போது, கூடுதல் அழகை தருகிறது.
கேப் ஸ்லீவ் பிளவுஸ்கள்... இதில் எளிமையாகவும், வசீகர பார்வையுடன் புன்னகைக்கும் த்ரிஷா.
த்ரிஷாவின் இந்த விதவிதமான பேஷன் பிளவுஸ்கள் யூத்களிடம் புது டிரெண்டை உருவாக்கக்கூடும்.