வாழ்வை வளமாக்கும் விநாயகர் நிவேதனம்..!

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர்.

மஞ்சள், புற்றுமண், அரைத்தமாவு, ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர்.

விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும்.

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.

மோதகம் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தில் இது படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட நினைத்தது நினைத்தபடி நடக்கும்

விநாயகரை ஓம் வக்ர துண்டாய ஹும் என்று கூறி வழிபட பகைத்துன்பம் நீங்கும்.