கோடையில் நலம் தரும் தர்பூசணி

கோடை காலத்துக்கு உகந்த பழங்களில் தர்பூசணியும் ஒன்று. அதிகளவில் நீர் இருப்பதால், வெப்பத்தை தணிக்கும்.

நார்ச்சத்து நிரம்பியதால், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்பினால், இதை உணவின் ஒரு பகுதியாக்கலாம்.

இதிலுள்ள எலக்ட்ரோலைட்டு ரத்த அழுத்தத்தை சீராக்கும். உற்சாகத்தையும், ஆற்றலையும் அளிக்கும்.

லைகோபீன் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் நீரிழிவு போன்ற பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.

தர்பூசணி சாறு குடிப்பதால், ஆஸ்துமா நோய் அபாயம் குறைக்கிறது.

அமினோ அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது; மாரடைப்பு வராமல் தடுக்கிறது.