சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

சிறுநீரக புற்றுநோய் என்பது சிறுநீரகம், சிறுநீரகப்பை, சிறுநீரக பாதையில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

புகைப்பழக்கம், பூச்சிக்கொல்லி பயன்பாடுள்ள இடங்களில் பணிபுரிதல், அதிக குடிபழக்கம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள்.

தீராத வயிற்று வலி, சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், சிறுநீர் அடிக்கடி செல்தல், சிறுநீர் பாதையில் எரிச்சல் இருந்தால் அலட்சிப்படுத்தாமல் டாக்டரிடம் கலந்தாலோசிக்கவும்.

சிறுநீரக பாதுகாப்புக்கு தினமும் 1 முதல் 1.5 லிட்டர் சிறுநீர் வெளியேற வேண்டும்.

சிறுநீர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீங்கள் தண்ணீர் குடிப்பது போதுமானதாக இல்லை என அர்த்தம்.

வெளியிடங்களில், சூடான இடங்களில் பணிபுரிபவர்கள் கூடுதலாக தண்ணீர் குடிக்கவேண்டும்; புகைப்பிடிப்பது கூடாது.