வளரும் குழந்தைகளின் சீரற்ற பல் வரிசையை தவிர்க்க என்ன செய்யலாம்?

குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் பல் முளைக்கத் துவங்கும். 15 மாதம் வரை கூட தாமதமாகும். பெற்றோர்களுக்கு தாமதமாக பல் முளைத்திருந்தால் அது குழந்தைக்கும் தொடரும்.

குறிப்பிட்ட பருவத்தில் படிப்படியாக முளைக்கும் பற்கள் சரியாகவே இருக்கும். முதலில் முளைக்கும் பால் பற்கள் அளவில் சிறியதாக இருக்கும்.

முளைத்த பற்கள் ஆறு வயது முதல் விழுந்து மீண்டும் முளைக்கும். 8 முதல் 9 வயதாகியும் பல் விழவில்லை என்றால் பால் பற்களை எடுத்து விட வேண்டும்.

சரியான பருவத்தில் பற்கள் விழுந்து முளைக்கவில்லை எனில் சீரற்று முளைக்க வாய்ப்புள்ளது.

12 வயதாகியும் பால் பற்கள் விழவில்லை எனில் மருத்துவர் ஆலோசனைப்படி அதனை பிடுங்கி விட வேண்டும்.குழந்தைகளின் உணவு முறையால் பல் சொத்தை வர வாய்ப்புள்ளது.

சில குழந்தைகளுக்கு பிறந்து 15 மாதம் வரை பற்கள் முளைக்காமல் இருக்கும். ஈறுகளில் கெட்டித் தன்மையால் இப்பாதிப்பு ஏற்படும்.

பற்கள் முளைக்காவிட்டால் டாக்டரின் ஆலோசனைப்படி ஈறுகளை கீறி விட வேண்டும். சீரற்ற பல் வரிசைகளை சரி செய்துவிடலாம். குழந்தைகளுக்கு பல் பராமரிப்பு மிக அவசியம்.