50 வயதிற்கு மேல் ஏற்படும் தொடர் தோள்பட்டை வலிக்கு காரணமென்ன?
தோள்பட்டை எலும்பின் தலைப்பகுதி தசை, ரொட்டேட்டர் கப் எனும் தசை நாண் என பல ஜவ்வின் உதவியுடன் செயல்படுகிறது.
ரொட்டேட்டர் கப் தசை நாண் தோள்பட்டையின் முக்கிய அசைவுகளுக்கு உதவி செய்கிறது.
வெகு
நாட்களாக அதிக எடை சுமப்பதாலோ, கையை தலைக்கு மேல் உயர்த்தி வேலை
செய்வதாலோ, விபத்தின் மூலம் தோள்பட்டைக்கு காயம் ஏற்படுவதாலோ பாதிப்பு
ஏற்பட்டு அது தொடர் வலியாக மாறும்.
இப்பாதிப்பு பொதுவாக 50 வயதை கடந்தவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இது தொடர் வலியாகவும், தோள்பட்டை முழுமையாக செயல்படுவதற்கு இடையூறாகவும் இருக்கிறது.
இந்த பாதிப்பை பார்சியல் ரொட்டேட்டர் கப் டியர் எனக்கூறுவர்.
ஓய்வு எடுப்பதாலும், வலி நிவாரணி மருந்துகளாலும், பிசியோதெரபி செய்வதாலும் இதை குணமாக்கலாம்.