குடல் ஆரோக்கியத்துக்கு என்னென்ன உணவு சாப்பிடலாம்?

வயிறு மற்றும் குடல் தொடர்பான பல பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கங்களே.

அதிக பதப்படுத்தப்பட்ட, கொழுப்பு நிறைந்த உணவுகளை, எந்த நேரத்திலும் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து விட்டது.

இவை சரியாக செரிமானம் ஆகாமல், குடலில் நீண்ட நேரம் தங்குவதால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகின்றன.

இதனால், குடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து, குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

பசிக்கு எளிய, சத்தான உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது அவசியம்.

குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தி செய்ய, இட்லி போன்ற புளிப்பூட்டப்பட்ட உணவு, பழைய சோறு தண்ணீர், மோர் மற்றும் சிறிது வெந்தயம் கலந்து சாப்பிடலாம்.

கீரைகள், காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தினசரி குறைந்தபட்சமாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நாக்கை கட்டுப்படுத்தினாலே, குடல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.