நோய் 'எக்ஸ்' என்றால் என்ன? கொரோனாவை அடுத்து மிரட்ட வருகிறதா?

எக்ஸ் நோய் (Disease X) என்ற ஒரு புதிய வைரஸ் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மழைக்காடுகளில் இருந்து பரவி உள்ளதாகவும், விரைவில் உலக நாடுகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு சுவாச வைரஸாக இருக்க வாய்ப்பு அதிகம்; அறியப்படாத நோய்க்கிருமியைக் குறிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட 20 மடங்கு அதிகமான இறப்புகளை நோய் X விளைவிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எபோலா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் அறிகுறிகள் போலவே, தற்போது எக்ஸ் நோய் வைரஸ் காய்ச்சலினால் தாக்கப்படுவர்களுக்கு அறிகுறிகள் ஏற்படும்.

இந்த வாரம் உலக பொருளாதார மன்றத்தில், டாவோஸில் உலக சுகாதார அமைப்பின் (WHO) முக்கிய மருத்துவக் குழுவினர் நோய் X பற்றி விவாதிக்கின்றனர்.

இது கோவிட்டின் மற்றொரு சாத்தியமான மாறுபாடாக இருக்கலாம் என்று பலர் கூறினாலும், சிலர் இது வேறு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

உலகளவில், சாத்தியமான நோய்க்கிருமிகளின் எண்ணிக்கை மிகப் பெரியது; அதே நேரத்தில் நோய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வளங்கள் குறைவாகவே உள்ளன என WHO கூறுகிறது.

தொடர்ந்து ஆராய்ச்சி, கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.