மலச்சிக்கலுக்கு தீர்வு என்ன?

எப்போதும் சாப்பிடும் உணவுகள் சரிவர செரிமானம் ஆக வேண்டும்.

குடல் அசைவுகளும் சரியாக இருந்தால் மட்டுமே மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. குடல் அசைவு குறையும் போது மலச்சிக்கல் ஏற்படும்.

நரம்பு, குடல் பிரச்னை உள்ளவர்களுக்கு இப்பிரச்னை ஏற்படும்.

மேலும், சிக்கன், மட்டன், பரோட்டா அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இது மூல நோயாக மாறி, தலைச்சுற்றலும் அதிகம் ஏற்படும். இதற்கு தீர்வு உணவு கட்டுப்பாடு அவசியம்.

காய்கறி, கீரை, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

நார்ச்சத்து உணவுகளான காய்கறி, கீரைகள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.

சிக்கன், மட்டன், பரோட்டா வகைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தாலே, மலச்சிக்கலை ஓரளவு தடுக்க முடியும்.