அடிக்கடி வரும் தோள்பட்டை வலிக்கு நிவாரணமென்ன?
அதிக வேலை செய்வது, முறையான இருக்கையில் அமராமல் கணினியை பார்த்து பணி செய்வது, துாங்கும் போது கைகளை தலைக்கு வைத்து துாங்குவது...
டூவீலர் ஓட்டுவது போன்ற பல காரணங்களால் கூட தோள்பட்டை வலி உண்டாகும்.
அடிக்கடி பயன்படுத்தக்கூடிய கையில் தோள்பட்டை வலி வந்தால், முறையான உடற்பயிற்சி மூலம் சரி செய்து விடலாம்.
30 வயதை கடந்தவர்களுக்கு இது அதிகமாக ஏற்படும்.
சாதாரண தோள்பட்டை வலியை ஆரம்பத்தில் பிசியோதெரபி மூலம் சரி செய்யலாம்.
விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு அதிகமாக தோள்பட்டை வலி வருகிறது. நாள்பட்ட தோள்பட்டை வலி இருந்தால் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
தோள்பட்டை வலி வயிற்று புண்ணாலும், இதயத்திலுள்ள பிரச்னையாலும் கூட ஏற்படும். வலி அதிகரித்தால் டாக்டரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.