சபரிமலை யாத்திரையில் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்க;டாது!

கார்த்திகை மாதம் பிறந்தாலே குதூகலம். பார்க்கும் திசையெல்லாம் ஐயனே! கேட்கும் ஒலியெல்லாம் சரணமே! எனும்படி ஸர்வம் ஐயப்ப மயம்தான்.

விரதம் ஆரம்பிக்கும் முன்னர் குலதெய்வம்/ இஷ்ட தெயவங்களை வணங்கிவிட்டு தாய், தந்தையரை வணங்க வேண்டும். நம்மை மலைக்கு அழைத்துச் செல்லப்போகும் குரு ஸ்வாமி கையால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

விரதக் காலங்களில் அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அலங்காரம்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

விரத காலம் முழுமையும் உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். ஒரு வேளை அளவோடு சைவ உணவருந்தி, இரவில் இலகு காரங்களை உட்கொண்டு உபவாசம் இருத்தல் வேண்டும்

கன்னி பூஜை, அன்னதானம் ஆகியவை மிகவும் சிறப்பான ஒன்று. பசித்திருக்கும் ஒரு ஏழைக்கு உணவளிப்பதும் அன்னதானம்தான்.

ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!

ஐயப்ப யாத்திரை அர்த்தமுள்ள யாத்திரை! வீணான குழப்பங்களை நீக்கி, யாத்திரை சென்று ஆனந்த சித்தனின் அருள் பெறுவோம்.