எங்கு எப்படி கொண்டாடப்படுகிறது தீபாவளி பண்டிகை: ..!

ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகை

தீபாவளியை இந்து மதத்தினர் மட்டு மல்ல அனைத்து தரப்பினரும் கொண்டாடுகின்றனர்.

ராஜஸ்தானில் தீபாவளியன்று பெண்கள் உடல் முழுவதும் எனாமல் நகைகளை அணிந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து நடனம் ஆடி மகிழ்வர்.

தீபாவளியன்று ராமரை வழிபடுவது ராஜபுத்திரர்களின் வழக்கம்.

மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை நடைபெறும். குபேரனை வழிபட்டால், பணத்தட்டுப்பாடு வராது என்பது அவர்களின் நம்பிக்கை.

வங்காளத்தில் காளிபூஜை நடைபெறும். தீபாவளியை இந்த மாநிலத்தில் மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.

காளியின் உக்கிரத்தை சங்கரன் தணித்த நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில் பசுக்களை அலங்கரித்து வழிபடுவர்.

ஜைனர்கள் தீபாவளி நன்னாளை மகாவீரர் வீடு பேறு அடைந்த நாளாகத் கொண்டாடுகின்றனர்.

சீக்கியர்கள் சீக்கிய மதகுரு, குருநானக் பூத உடல் நீத்து புகழுடம்பு எய்திய நாளாக கொண்டாடுகின்றனர்.

சீனாவில் ஹீம்-ஹூபா மியான்மரில் தாங்கிஜீ, தாய்லாந்தில் லாய்கிரதோஸ் ஸ்வீடனில் லூசியா ஆகிய விழாக்கள் நமது நாட்டு தீபாவளியை போலவே கொண்டாடுகின்றனர்.

நாமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவோம்.. மகா லட்சுமி அருளை பெறுவோம்..!