எந்தெந்த உணவு குடலுக்கு கேடு? என்னென்ன உணவு சாப்பிடலாம்?

அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவு, செயற்கை நிறமிகள் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்படும் உணவு, குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

சிப்ஸ் வகைகள், நுாடுல்ஸ், பாக்கெட், பாட்டில்களில் விற்கப்படும் குளிர்பானங்கள், சிக்கன் நகெட்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள் ஆரோகியமற்றது.

மேலும் சில பிஸ்கெட்ஸ், பேக்கரி உணவு அடிக்கடி சாப்பிடுவது குடலுக்கு நல்லதல்ல.

பசிக்கு எளிய, சத்தான உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது அவசியம்.

குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தி செய்ய, இட்லி போன்ற புளிப்பூட்டப்பட்ட உணவு, பழைய சோறு தண்ணீர், மோர் மற்றும் சிறிது வெந்தயம் கலந்து சாப்பிடலாம்.

கீரைகள், காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தினசரி 2 -3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாக்கை கட்டுப்படுத்தினாலே, குடல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.