கல்லீரல் பரிசோதனை யாருக்கெல்லாம் அவசியம்?
முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, நோய் தொந்தரவு இல்லாத ஆரோக்கியமான நபர் என்றால் 40 வயது வரை கல்லீரல் பற்றி கவலைப்படவோ பரிசோதனை செய்யவோ தேவையில்லை.
40 வயதிற்கு மேல் வயதின் காரணமாக இயற்கையாகவே உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்.
உடல் செல்களில் மாற்றங்கள் ஏற்படலாம், செல்கள் வளராது. அந்த நேரத்தில் நமது உடலின் தேவையை கல்லீரல் தரமுடியாமல் போகும் போது சில நோய்கள் ஏற்படும்.
மஞ்சள் காமாலை, கண்ணில் நிறம் மாறுதல், உடல் அரிப்பு, மலத்தின் நிறம் மாறுவது, சிறுநீர் நிறம் மாறுதல், கை, கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.
அவர்கள் உடனே கல்லீரல் பரிசோதனை செய்ய வேண்டும். இதுதவிர கல்லீரலை பாதிக்கும் பழக்கவழக்கங்களை வைத்திருப்பவர்களும் பரிசோதனை செய்ய வேண்டும்.
மது அருந்துபவர்கள், சர்க்கரை, கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள் வருடம் ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.
மேலும் அடிக்கடி வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள், உடல்பருமன் உள்ளவர்கள் எந்த தொந்தரவும் தெரியவில்லை என்றாலும் கல்லீரல் பரிசோதனை செய்வது அவசியம்.