குளிர் காலத்தில் பற்கூச்சம் ஏன்?
நமது பற்களுக்கு இயற்கையாகவே தட்பவெப்ப நிலைகளை ஏற்றுக்கொள்ளும் திறனுள்ளது.
70 டிகிரி செல்சியஸ் சூடான காபியையும், 1.5 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நீரையும் தாங்கும் சக்தி உண்டு.
குளிர் காற்றில் நிற்கும்போதோ, குளிரில் வெளியே செல்லும்போதோ தட்பவெப்பம் மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக மாறக்கூடும்.
இதனால், பற்களின் மேல் ஒருவித அழுத்தம் ஏற்படும்.
இந்த அழுத்தம் நாளடைவில் பற்களுக்குள் கண்ணுக்கு தெரியாத அளவிலான விரிசல்களை உண்டாக்கும். இதுவே வலி மற்றும் கூச்சம் வரக் காரணம்.
எனவே, விரிசல்களை அடைக்கும் விதமாக பற்களின் மேல் மருந்தை பூசலாம். பல் டாக்டரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட இடைவெளியில் இதை செய்ய வேண்டும்.