இளம் வயதினருக்கும் புற்றுநோய் வருவது ஏன்? தவிர்க்க என்ன செய்யலாம்?
உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடல் பருமன் உள்ளிட்ட பல காரணிகளால் தற்போது இளம் வயதினருக்கும் புற்றுநோய் வருவது அதிகரிக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
அதிலும் முக்கிய காரணம் நமது உணவுப் பழக்கமும், உணவு தயாரிப்பு மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுமே என கூறப்படுகிறது.
பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தும் ரசாயனங்கள், செயற்கை நிறமிகள், சுவையூட்டிகள் உடலுக்குள் சேரும்போது புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது.
தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால், இந்த ரசாயனங்களின் தாக்கமும் அதிகமாகிறது.
அதேபோல், உடலில் தேவையை விட அதிகமாகச் சேரும் கொழுப்பிலிருந்து உருவாகும் நச்சு வேதிப்பொருட்களும், இளம் வயதிலேயே புற்றுநோய் உருவாக முக்கிய காரணமாக உள்ளன.
இயற்கையான, ரசாயனங்கள் கலக்கப்படாத, பாக்கெட்டுகளில் அடைக்காத உணவை சாப்பிட வேண்டும்.
அளவாக சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சி செய்து, உடல் எடையைச் சரியான அளவில் பராமரிப்பது அவசியம்.
குறிப்பாக குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்ல உணவுப் பழக்கத்தை சொல்லித்தர வேண்டும்.