கொரோனா தொற்று முதலில் நுரையீரலை பாதிப்பது ஏன்? எப்படி தவிர்ப்பது?

கொரோனா வைரஸ் இருமல், சளி மூலம் காற்றினுள் கலந்துவிடும்.

இதனால், அருகில் இருப்பவர்கள் அக்காற்றினை சுவாசிப்பதால் மூக்கு, வாய் மூலம் நுரையிரலுக்குள் கிருமி சென்று நிமோனியாவை ஏற்படுத்தியது.

கொரோனா கிருமி நுரையீரலையும் இதயத்தையும் இணைக்கும் குழாயில் ரத்தக்கட்டி போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தி சிலருக்கு மரணம் வரை ஏற்படுத்தியுள்ளது.

காற்றில் பரவ கூடிய கிருமிகளான வைரஸ், பாக்டீரியா, பூஞ்சையானது மூக்கு, வாய் வழியாக நுரையீரலுக்குள் சென்று நுரையீரல் நிமோனியாவை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டுக்கு 'மைக்கோ பாக்டீரியா டியூபர்குலோசிஸ்' பாக்டீரியா கொரோனா போல் காற்றில் பரவி அக்காற்றை சுவாசிக்கும் நபருக்கு நுரையீரல் காசநோய் உண்டாக்குகிறது.

காற்றினால் பரவும் அனைத்து கிருமிகளும் நுரையீரலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

பிரச்னையை தவிர்க்க அதிக கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது எப்போதும் முகக்கவசம் அணிவது நல்லது.