முருகப்பெருமான் அவதரித்த நாள்... வைகாசி விசாகம் கொண்டாடுவது ஏன்?
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசி மாதத்து விசாகநாள் ஆகும்.
வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும்.
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்யலாம்.
இதனால், மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.
அதேவேளையில் இந்த வைகாசி விசாக தினம், எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, இன்று விரதமிருந்து வழிபாடு செய்தால் முருகனின் அருளும், நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
திருச்செந்தூர், பழநி உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.