இரவு நேரத்தில் ஏன் தாமதமாக சாப்பிடக்கூடாது?

இரவில் தாமதமாக சாப்பிடும்போது தூங்குவதிலும் தாமதம் உண்டாவதால், தூக்க சுழற்சியில் பாதிப்பு ஏற்படுகிறது; குழப்பமான கனவுகளுக்கும் இது வழிவகுக்கும்.

பல இரைப்பை பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளது. உணவு சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதே இதற்குக் காரணம்.

இரவு நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இது பகலில் உள்ளதைப் போன்று கலோரிகளை எரிப்பதில் பயனுள்ளதாக இல்லை. எனவே, உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

சரியாக தூங்காத போது, மறுதினம் எரிச்சல் மற்றும் மோசமான மனநிலையுடன் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது.

இரவில் தாமதமாக சாப்பிட்டு விட்டு தூங்குவதை தொடர்ச்சியாக செய்யும் போது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்புக்கு வழிவகுக்கும்.

பொதுவாக நம்முடைய உடல் வேலை செய்ய தயாராக இருப்பது பகல் நேரத்தில் மட்டுமே. இரவு நேரம் என்பது ஓய்வெடுக்க மட்டுமே உரியதாகும்.

படுக்கைக்கு செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.