அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் கருவிலுள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?

மருத்துவத்துறையில் அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ., சி.டி., ஆகிய மூன்று விதமான ஸ்கேன் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இதில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறையில் சவுண்ட் வேவ்ஸ் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு குழுந்தைகளின் வளர்ச்சி குறித்து அறிய இந்த முறை சிறந்தது.

இதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா, ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை அறிய முடியும். இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.

முதுகெலும்பு, தண்டுவடம் சார்ந்த பிரச்னைகளுக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.

காந்த அலைகள் பயன்படுத்தப்படுவதால் இதிலும் கர்ப்பிணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. அதே நேரத்தில் அடிக்கடி எடுக்கக் கூடாது.

சி.டி., ஸ்கேனில் எக்ஸ்ரே பயன்படுத்தப்படுவதால் கருவிலுள்ள குழந்தையின் திசுவில் பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் கர்ப்பிணிகள் சி.டி., ஸ்கேன் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

எந்த ஸ்கேனாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரையுடன் எடுக்க வேண்டும்.