இன்று உலக சாக்லேட் தினம்.. வரலாறு அறிவோமா…
உலக அளவில் பல நாடுகளில் ஜூலை 7 ஆம் தேதி உலக சாக்லேட் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சாக்லேட் பரிமாறப்படுகிறது. உடல் நிலையைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் தன்மை சாக்லேடிற்கு உண்டு
மாயன் இன மக்கள் வாழ்ந்த காலத்திலேயே சாக்லேட் கண்டு பிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் முதன் முதலில் 1550ல் ஐரோப்பாவில் சாக்லேட் அறிமுகமானது என வரலாறு கூறுகிறது.
இது 'கோகோ' மர கொட்டையின் விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்தின் கலவையை சர்க்கரை, பால், பல இடு பொருட்களை சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.
சாக்லேட்டுகளில் கஃபைன் என்கிற மூலப்பொருட்கள் இருக்கிறது. இது நமது உடலில் இருக்கும் ஆழமான அன்பின் உணர்வைத் தூண்டுகிறது.
இதில் பல வகைகள் உள்ளன. உலகில் கோகோ உற்பத்தியில் ஆப்ரிக்கா (30%) முன்னணியில் உள்ளது.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து போன்ற நாடுகள் அதிக சாக்லேட் ஏற்றுமதி செய்கின்றன.