உப்பை குறைப்போம், அமைதியை கடைபிடிப்போம்… இன்று உலக உயர் ரத்த அழுத்த தினம்!

உயர் ரத்த அழுத்தத்தை தடுப்பது, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 17ல் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 100 கோடி பேருக்கு மேல் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவுப் பழக்கவழக்க மாற்றம், சிறுநீரகக் கோளாறு, மரபியல், உடல் பருமன், போல பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

வேலைப்பளு, கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப்பழக்கம் போன்றவையும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிப்பு, தீடீர் மாரடைப்பு மற்றும் வாத நோய், சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.

உணவில் உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும். பேக்கரி பொருள்கள், சிப்ஸ், பேக்டு ஃபுட்ஸ் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய் போன்ற உணவுப் பொருள்களை தவிர்க்க வேண்டும்.

தினமும் உணவுடன் பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை, மாலை இருவேளைகளிலும் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. குறைந்தது 20 நிமிடம் தியானம் செய்யலாம்.